ஆப்கனில் மிதமான நிலநடுக்கம் 
உலகம்

ஆப்கனில் நிலநடுக்கம்! தில்லி, ராஜஸ்தானிலும் நில அதிர்வு!

ஆப்கானிஸ்தானில் இன்று(வியாழக்கிழமை) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

DIN

ஆப்கானிஸ்தானில் இன்று(வியாழக்கிழமை) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 255 கிமீ ஆழத்தில் இன்று காலை 11.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இது ரிக்டர் அளவுகோலில் 5.7 எனப் பதிவாகியுள்ளதாகவும் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு தில்லி, ராஜஸ்தானின் சில பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல பாகிஸ்தானின் பஞ்சாபின் சில பகுதிகள், கைபர் பக்துன்க்வா, இஸ்லாமாபாத் பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

ஆப்கனின் அஷ்காஷம் பகுதியில் இருந்து 28 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எதுவும் பதிவாகவில்லை.

முன்னதாக கடந்த ஆக. 16 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் 4.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி: சூா்ய காந்த்

முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி விழா

ஊராட்சிகளில் ஆதாா் சிறப்பு முகாம்

போக்ஸோ சட்டத்தில் காவலா் கைது

வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சரிந்து விழுந்த மேற்கூரை ஓடுகள்

SCROLL FOR NEXT