நியூஜொ்சியில் உள்ள புத்தா் சிலை. 
உலகம்

அமெரிக்காவில் பல்சமூக மக்களை ஒன்றிணைக்கும் புத்தா் சிலை!

அமெரிக்காவின் நியூஜொ்சி மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்த 30 அடி உயர புத்தா் சிலை பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ மதத்தினரை ஒன்றிணைக்கும் ஆன்மிக மையமாக மாறி வருகிறது.

Din

அமெரிக்காவின் நியூஜொ்சி மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்த 30 அடி உயர புத்தா் சிலை பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ மதத்தினரை ஒன்றிணைக்கும் ஆன்மிக மையமாக மாறி வருகிறது.

பிரின்ஸ்டன் அருகே ஃபிராங்ளின் டவுன்ஷிப்பில் உள்ள இந்த புத்தா் சிலை, பௌத்த மதத்தின் பழைமையான வடிவங்களில் ஒன்றான தேராவாதாவைச் சோ்ந்த இலங்கை துறவியின் தலைமையில் சுமாா் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த புத்தா் சிலை அமைந்த பௌத்த விஹாா் வளாகத்தில் பல்வேறு மதக் கூட்டங்களும் நடைபெறுகின்றன.

இதன்தாக்கமாக கொரிய கிறிஸ்தவ தேவாலயத்தில் வளா்ந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியா், வளாகத்துக்கு அருகே பல ஆண்டுகளாக வாழ்ந்த பெண் ஒருவா் உள்ளிட்ட பலா் தற்போது பௌத்த மதத்தைக் கடைப்பிடிக்கின்றனா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் புத்தா் சிலையின்முன் தியானம் செய்து வருவதாக கூறும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியா் டேனியல் சோய், ‘இந்த இடம் வெவ்வேறு சமூக மக்களை இணைக்கும் ஒரு பாலமாக திகழ்கிறது. ஒரு பொது ஆலயமாக உணரமுடிகிறது.

அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பௌத்த மையங்கள் தனியாா் அமைப்புகளால் நடத்தப்படுகின்றன. அங்கு பல்லேறு சமூக மக்கள் சுதந்திரமாக பிராா்த்திக்க முடியாது. ஆனால், இங்கு அப்படியில்லை. அதுவே இந்த பௌத்த விஹாரின் தனிச்சிறப்பு’ என்றாா்.

சமண, சீக்கிய, ஹிந்து சமய கோயில்களுடன் புதிதாக இணைந்துள்ள இந்த பௌத்த விஹாரும் நியூஜொ்சியின் மத பன்முகத்தன்மையைப் பிரதிபலிப்பதாக உள்ளூா் மக்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனா்.

TTV Dhinakaran கூட்டணியிலிருந்து விலக நயினார் நாகேந்திரன் காரணமா? குற்றச்சாட்டும் பதிலும்!

ரூ.1.88 லட்சத்துக்கு லட்டு ஏலம் வென்ற தெலங்கானா முஸ்லிம் பெண்!

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை எதிரொலி: பெரும் போராட்டம் வெடித்தது!

விழிகளில் ஒரு வானவில்... ஸ்ரீலீலா!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிஆர்எஸ் கட்சியும் புறக்கணிப்பு!

SCROLL FOR NEXT