AP
உலகம்

சிடோ புயல்: ஆப்பிரிக்காவில் 100க்கும் மேற்பட்டோர் பலி!

ஆப்பிரிக்காவில் சிடோ புயலால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ஆப்பிரிக்காவில் சிடோ புயலால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம வலுப்பெற்று புயலாக மாறியது. சிடோ எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயல், கடந்த சில நாள்களாக ஆப்பிரிக்காவில் நிலை கொண்டது. இந்தப் புயலின் தாக்கத்தால் மலாவி நாட்டில் வெள்ளம் ஏற்படும் அளவிற்கு கனமழை பெய்து வருகிறது.

ஆப்பிரிக்காவையே புரட்டிப் போட்ட சிடோ புயலினால் இதுவரையில் 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிவாரணப் பணிகளில் மீட்புப் குழுவினர்

அதுமட்டுமின்றி, சிடோ புயலினால் அண்டை நாடான மொஸாம்பிக்கின் கடலோர மாகாணங்களான நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட கடலோர மாகாணங்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இங்குள்ள ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து, தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நாட்டில் மட்டும் சிடோ புயல் காரணமாக 34 பேர் வரையில் பலியானதாகக் கூறப்படுகிறது. மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்; 90,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

SCROLL FOR NEXT