ஸ்ரீராம் கிருஷ்ணன்  
உலகம்

அமெரிக்க ஏஐ ஆலோசகராக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்!

அமெரிக்க ஏஐ ஆலோசகராக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமனம்

DIN

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணரும், தொழில்முனைவோருமான ஸ்ரீராம் கிருஷ்ணன் அமெரிக்க செய்யறிவு கொள்கை ஆலோசகராக நியமித்து உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபராக பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப்.

டொனால்ட் டிரம்ப் ஆட்சியில், வெள்ளை மாளிகையின் அறிவியல் தொழில்நுட்பக் கொள்கைத் துறைன் செய்யறிவு (செயற்கை நுண்ணறிவு) பிரிவின் மூத்த கொள்கை ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பிறந்த, வளர்த்து, படித்த ஸ்ரீராம் கிருஷ்ணன், மைக்ரோசாஃப்ட், டிவிட்டர் எனப்படும் எக்ஸ், யாஹு, ஃபேஸ்புக், ஸ்நாப் என பல முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

இவர், வெள்ளை மாளிகை, செய்யறிவு, கிரிப்டோ துறை தலைவராக செயல்படும் டேவிட் ஓ சாக்ஸ் உடன் இணைந்து செயல்படுவார் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அமெரிக்காவின் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்பிஐ) இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் பட்டேல், உளவுத் துறை இயக்குநராக துளசி கப்பாரட் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது டிரம்பின் ஆட்சிக்குள் மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் இணைந்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பிடெக் பட்டதாரியான ஸ்ரீராம், காஞ்சிபுரத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்று கடந்த 2005ஆம் ஆண்டு தன்னுடைய 21வது வயதில் அமெரிக்கா சென்று மைக்ரோசாஃப்ட் பணியில் இணைந்தார். தொடர்ந்து பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி தற்போது இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் ஆட்சியின்போது, அமெரிக்கா, செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணியில் தொடர்வதை உறுதி செய்வதிலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அதிபரின் ஆலோசனைக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது உள்பட, செயற்கை நுண்ணறிவு தொடர்பான அரசின் முழுக் கொள்கையை வடிவமைக்கவும் ஒருங்கிணைக்கவும் உதவுவார் என்று டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT