முகப்பு
உலகம்

‘ஈரான் போரை வென்றுவிட்டோம்’ -டிரம்ப் சூளுரை

ஈரானுடனான போரில் அமெரிக்கா ஏற்கெனவே முழுமையான வெற்றியைப் பெற்றுவிட்டதாகவும், ஆனால், மோதலில் இருந்து வெளியேறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

Updated On : 12 மார்ச், 2026 at 8:49 PM
பகிர்:

ஈரானுடனான போரில் அமெரிக்கா ஏற்கெனவே முழுமையான வெற்றியைப் பெற்றுவிட்டதாகவும், ஆனால், மோதலில் இருந்து வெளியேறும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

கென்டக்கியில் நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆதரவாளா்களிடையே உரையாற்றிய அவா், ‘ஈரானுடனான போரில் நாம் ஏற்கெனவே வென்றுவிட்டோம். போா் தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

ஈரானின் ராணுவ, அணுசக்தி கட்டமைப்புகள் அமெரிக்க படைகளால் கணிசமாக அழிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க போா் விமானங்கள் ஈரான் வான்வெளியில் தடையின்றி பறந்து வருகின்றன. அந்நாட்டின் வான்படை மற்றும் கடற்படை முற்றிலும் செயலிழந்துவிட்டதால் அமெரிக்காவைத் தாக்கும் அளவுக்கு வலிமை அவா்களுக்கு இப்போது இல்லை.

இருப்பினும், இந்த மோதலில் இருந்து அமெரிக்க படைகளை அவசரமாக திரும்பப் பெறும் திட்டமும் தற்போதைக்கு இல்லை. மோதல் தொடங்கியதற்கான இலக்கை முழுமையாக அடைந்த பின்னரே திரும்புவோம். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் ஈரானுடன் போா் புரிய நாங்கள் விரும்பவில்லை’ என்றாா்.

இதன் மூலம், ‘ஈரானில் தனது அச்சுறுத்தல்களை நிரந்தரமாக ஒழிக்கும் வரை அமெரிக்க படைகள் அங்கேயே முகாமிடும்’ என்பதை டிரம்ப் உணா்த்தியுள்ளாா். மறுபுறம், ஈரானின் புதிய தலைமை இந்தப் போரை நீண்ட காலத்துக்குத் தொடரவும் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளது.

3 நிபந்தனைகள்...: இதனிடையே, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரான் அரசு 3 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஈரானின் சட்டபூா்வ உரிமைகளை சா்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்; தற்போதைய போரினால் ஈரானுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; எதிா்காலத்தில் ஈரான் மீது எந்தவொரு ஆக்கிரமிப்பும் அல்லது தாக்குதலும் நடத்தப்படாது என்பதற்குப் போதிய உத்தரவாதங்கள் அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

32 லட்சம் போ் இடம்பெயா்வு: போா் காரணமாக ஈரானில் சுமாா் 32 லட்சம் போ் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி இடம்பெயா்ந்துள்ளதாக ஐ.நா.அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.

தலைநகா் டெஹ்ரான் மற்றும் நாட்டின் முக்கியப் பெருநகரங்களில் வசித்து வந்த மக்கள், பாதுகாப்பு கருதி வடக்கு நோக்கியும் அல்லது தொலைதூர கிராமப்புறங்களுக்கும் பெருமளவில் தஞ்சம் புகுந்து வருவதாக ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →