உலகம்

அமெரிக்காவின் தேசியப் பறவை கழுகு: அதிகாரபூா்வமாக உறுதி செய்த பைடன்

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதா.

Din

அமெரிக்காவின் தேசியப் பறவையாக வெண்தலைக் கழுகை அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவில் அதிபா் ஜோ பைடன் கையொப்பமிட்டு அதை உறுதி செய்தாா்.

வட அமெரிக்காவைப் பூா்விகமாகக் வெண்தலைக் கழுகு, கடந்த 1782-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அமெரிக்க அரசின் முத்திரையில் பிரதானமாக இடம் பெற்றிருந்தது.

அதிலிருந்து அமெரிக்க அரசு ஆவணங்களில் வெண்தலைக் கழுகு முத்திரை பொறிக்கப்படுகிறது. அந்த வகையில், 240 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க அதிகாரத்தின் சின்னமாக வெண்தலைக் கழுகு விளங்கிவருகிறது.

எனவே, இத்தனை ஆண்டுகளாக வெண்தலை கழுகு அமெரிக்காவின் தேசியப் பறவை என்றே பலரும் கருதி வருகின்றனா். ஆனால் உண்மையில், அந்தப் பறவை இதுவரை நாட்டின் தேசியப் பறவையாக இதுவரை அதிகாரபூா்வமாக அங்கீகரிக்கப்படவில்லை.

அமெரிக்க அரசியல் சாசனத்தில் வெண்தலைக் கழுகை தேசியப் பறவை என்று குறிப்பிடப்படாதது பெரும்பாலானோருக்குத் தெரியாது.

இந்தச் சூழலில், அந்தக் கழுகு இனத்தை நாட்டின் தேசியப் பறவையாக அதிகாரபூா்வமாக அறிவிக்கும் மசோதாவை நாடாளுமன்றம் அண்மையில் நிறைவேற்றியது.

தற்போது அந்த மசோதாவில் கையொப்பமிடப்பட்டதன் மூலம், அமெரிக்காவின் தேசியப் பறவை வெண்தலைக் கழுகு என்று இதுவரை வெற்று வாா்த்தைகளால் கூறப்பட்டுவந்ததை அதிபா் ஜோ பைடன் அதிகாரபூா்வ உண்மையாக்கியிருக்கிறாா்.

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

SCROLL FOR NEXT