கோப்புப்படம் 
உலகம்

பாக்.: தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில் தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

கராச்சி : பாகிஸ்தானில் இம்மாதம் 8-ஆம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.  தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இநிலையில், பாகிஸ்தானின் கராச்சி மாநகரிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இன்று(பிப்.3) குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேர்தல் ஆணைய அலுவலகத்தினுள் வெடிகுண்டு மறைக்கப்பட்டிருந்த நெகிழிப் பை ஒன்றை மர்மநபர்கள் மறைத்து வைத்துவிட்டுச் சென்றிருந்த நிலையில், துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப்பணியாளர் ஒருவர் அந்த பையை எடுத்து குப்பையில் வீசியுள்ளார். இந்நிலையில், குப்பையில் கிடந்த நெகிழிப் பையில் அடைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு  இன்று(பிப்.3) காலை திடீரென்று பயங்கர சத்த்துடன் வெடித்தது. 

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  தேர்தல் ஆணைய அலுவலகத்தினுள் குண்டுவெடிப்பு நிகழ்திருந்தால் பலத்த சேதம் ஏற்பட்டிருக்கக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, தேர்தலையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுக்கிர தோஷம் நீக்கும் ஸ்ரீரங்கம்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

திராவிட மாடல் 2.0 மீண்டும் அமைய பெண்கள் முடிவெடுத்து விட்டார்கள்: அமைச்சர் கே.என். நேரு

இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ. 22.20 கோடி அபராதம்: மத்திய அமைச்சர் தகவல்

இப்படியொரு சம்பவம் நடந்தால்... லாக்டவுன் - திரை விமர்சனம்!

விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் நில அதிர்வு!

SCROLL FOR NEXT