உலகம்

சிரியாவில் அமெரிக்க படைகளை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் -6 வீரர்கள் உயிரிழப்பு

DIN

பீய்ரூர்(சிரியா) : கிழக்கு சிரியாவில் ராணுவ பயிற்சி தளத்தை குறிவைத்து  நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில் சிரியாவை சேர்ந்த  6 வீரர்கள் உயிரிழந்தனர். 

சிரியாவை சேர்ந்த குர்திஷ் படைகள் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் அல்-ஓமர்  ராணுவ பயிற்சி தளத்தை குறிவைத்து இன்று(பிப்.5) ட்ரோன் தாக்குதல்  நடத்தப்பட்டது. எனினும் இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இராக்கை சேர்ந்த ஈரான் ஆதரவு ஆயுதக் குழு இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க வீரர்களை திரும்பப்பெற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வரும் இராக்கை சேர்ந்த ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள்,  அங்குள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மீது
தொடர்ந்து பல கட்டங்களாக ட்ரோன் தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றதன. இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளும் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களின் பயங்கரவாத தளவாடங்களை குறிவைத்து தாக்குதல்களை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜோா்டானிலுள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் கடந்த  மாதம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரா்கள் உயிரிழந்ததற்குப் பதிலடியாக சிரியாவிலும், இராக்கிலும் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் மீது அமெரிக்கா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, சிரியாவில் அமெரிக்க படைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் நாளை வாக்குப்பதிவு: எல்லை சோதனைச் சாவடிகளில் வாகன சோதனை தீவிரம்

பாஜக இல்லாத பாரதம்: தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி

பாகிஸ்தான்: சவூதி பட்டத்து இளவரசா் வருகை திடீா் ஒத்திவைப்பு

மே 15 வரை 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT