உலகம்

சிலி காட்டுத்தீ: பலியானோர் எண்ணிக்கை 112ஆக அதிகரிப்பு

DIN

தென்அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 112ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த சனிக்கிழமை சிலியின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 92 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டது. கோடைகாலத்துடன் காற்றும் சோ்ந்துள்ளதால் தீ மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. காட்டுத் தீயால் சுமார் 1,100 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின.  26,000 ஏக்கர் நிலங்களும் தீயில்  எரிந்து சேதமாயின. 

தீயை அணைக்க தீயணைப்பு மற்றும் ராணுவ வீரர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனா். இந்த தீவிபத்தில் சிக்கி இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 112ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளனர். வெப்பநிலை மிகவும் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.  

நாட்டு மக்கள் அனைவரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். இருப்பிடத்தைவிட்டு வெளியேற அதிகாரிகள் அறிவுறுத்தினால் உடனடியாக அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என அந்நாட்டு அதிபா் கேபிரியல் போரிஸ் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையில் கேட்டுக்கொண்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT