ஹமாஸின் புகலிடம் ராபா: இஸ்ரேல் தாக்குதல் உறுதி!
இஸ்ரேலின் போர் நடவடிக்கை விரிவாக்கம் திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
தெற்கு எல்லை நகரமான ராபாவில் தரைவழி போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல் தெளிவாக திட்டமிட்டு வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் தெரிவித்தார்.
காஸாவின் பொதுமக்கள் பாதுகாப்புக்கு முறையான திட்டமிடுதல் இல்லாமல் போர் நடவடிக்கை விரிவாக்கம் என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
காஸாவின் பெரும்பாலான மக்கள்தொகை ராபாவின் நெரிசலில் தஞ்சமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலின் இந்த முடிவு அவர்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் என பன்னாட்டு அமைப்புகள் எச்சரித்துவருகின்றன.
“ஹமாஸின் பிடியில் உள்ள ராபாவில் எதிர்கால நடவடிக்கைகளை நாங்கள் முழுமையாகத் திட்டமிட்டுள்ளோம்” என யோவ் கேலண்ட் தெரிவித்துள்ளார்.
எப்போது நடவடிக்கைகள் தொடங்கும் என அவர் குறிப்பிடவில்லை.
கான் யூனிஸில் மருத்துவமனை தாக்குதலில் 70 ஹமாஸ் வீரர்களைக் கைது செய்ததாகவும் அவர்களில் 20 பேர் நேரடியாக அக்.7 தாக்குதலோடு தொடர்புடையவர்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.