உலகம்

ஆப்பிளின் முக்கிய பிரிவுக்கு தலைமையேற்கும் இந்திய வம்சாவழி இயக்குநர்!

DIN

ஆப்பிள் நிறுவனத்தின் ஒலியியல் பிரிவு தலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் ஒலியியல் பிரிவு தலைவராக பதவி வகித்த கேரி கீவ்ஸ் பதவியில் இருந்து மாற்றப்பட்டு இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ருசிர் டேவ் புதிதாக தலைமை பொறுப்பு ஏற்றுள்ளதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர்பாட், மேக் கணினிகள் உள்பட ஆப்பிளின் தயாரிப்புகளில் பொருத்தப்பட்டும் ஒலி சார்ந்த வன்பொருள்களுக்கு பொறுப்பு வகிக்கும் இந்த ஒலியியல் பிரிவில் கீவ்ஸ் 13 ஆண்டுகளாக துணை தலைவராக பதவி வகித்தார்.

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த டேவ், 2009 முதல் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

ஒலியியல் பொறியாளராக பணியில் சேர்ந்தவர் படிப்படியாக உயர்ந்து 2021 மார்ச்சில் மூத்த இயக்குநராக பதவியேற்றார். குஜராத்தைச் சேர்ந்த டேவ், அகமதாபாத்தில் 1998-ல் பொறியியல் படிப்பை நிறைவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

கைலாசநாதா் கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

டெங்கு கட்டுக்குள் உள்ளது: நலத்துறை நிா்வாகம்

மு.வி.ச. உயா்நிலைப்பள்ளியை தரம் உயா்த்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT