முகப்பு
உலகம்

காஸா போர் எதிரொலி: பாலஸ்தீன பிரதமர் ராஜிநாமா!

பாலஸ்தீன பிரதமர் முஹம்மது ஷ்டய்யே இன்று(பிப்.26) தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

Updated On : 26 பிப்ரவரி, 2024 at 3:52 PM
முஹம்மது ஷ்டய்யே - படம் | ஏபி
பகிர்:

பாலஸ்தீன பிரதமர் முஹம்மது ஷ்டய்யே இன்று(பிப்.26) தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

பாலஸ்தீனர்கள் வசிக்கும் காஸா பகுதியில் ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம், தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில், பாலஸ்தீன நிர்வாகத்தில் புதிய திருப்பமாக, பாலஸ்தீன பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக முஹம்மது ஷ்டய்யே இன்று(பிப்.26) அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆக்கிரமிப்புகள் வாழும் மேற்குகரை பகுதியில் உள்ள பாலஸ்தீன பகுதிகளை பாலஸ்தீன நிர்வாகம் என்றழைக்கப்படும் பாலஸ்தீன பிரதமர் முஹம்மது ஷ்டய்யே தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்தது.

Advertisement

இந்நிலையில், பாலஸ்தீனத்தில் தனது தலைமையிலான அரசை கலைத்துவிட்டு புதிய அரசு பொறுப்பேற்க பிரதமர் முஹம்மது ஷ்டய்யே விருப்பம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸிடம் தனது ராஜிநாமா கடிதத்தை அவர் இன்று(பிப்.26) சமர்ப்பித்துள்ளார்.

காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல் எதிரொலியாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், காஸாவில் போர் முடிவுற்ற பின், அதற்குப் பிந்தைய சூழலில் பாலஸ்தீனத்தை நிர்வகிக்க புதிய அரசு அமைவதே சிறந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த பாலஸ்தீன நிர்வாகத்தின் பிரதமராக முஹம்மது ஷ்டய்யே கடந்த 2019-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்நிலையில், அமெரிக்காவின் கடும் அழுத்தம் காரணமாகவே பாலஸ்தீன பிரதமர் முஹம்மது ஷ்டய்யே இந்த முடிவை எடுத்திருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

முஹம்மது ஷ்டய்யே தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகியிருப்பதன் மூலம், பாலஸ்தீனத்தில் அமெரிக்க ஆதரவுடன் புதிய அரசு அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.