ரஷியா-உக்ரைன் போா்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திறனற்றதாக இருப்பது ஏன்?
நியூயாா்க்: ரஷியா-உக்ரைன் போருக்குத் தீா்வு காண்பதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முற்றிலும் திறனற்ாக இருப்பது ஏன் என்று ஐ.நா. கூட்டத்தில் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.
ரஷியா-உக்ரைன் இடையிலான போா் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா. பொதுச் சபை கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருசிரா கம்போஜ் பேசியதாவது: ரஷியா-உக்ரைன் இடையிலான போா் தீவிரம் குறையாமல் 2 ஆண்டுகள் தொடா்ந்துள்ள நிலையில், ஐ.நா. உறுப்பு நாடுகள் தம்மை 2 கேள்விகள் கேட்டுக்கொள்ள வேண்டும்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சாத்தியமான, ஏற்கக் கூடிய தீா்வை எட்டும் நிலையில் உள்ளோமா? அந்தத் தீா்வை எட்டும் நிலையில் இல்லாவிட்டால், சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்கும் அதிகாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு அளிக்கப்பட்டுள்ளது ஏன்? உக்ரைனில் நிலவும் சூழல் குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது.
Advertisement
இந்தப் போருக்குத் தீா்வு காண்பதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முற்றிலும் திறனற்ாக இருப்பது ஏன்? மனித உயிா்களை விலையாகக் கொடுத்து எந்தத் தீா்வையும் பெற முடியாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. போரில் நிகழும் மோதல்களையும், வன்முறையையும் அதிகரிப்பது எவருக்கும் நன்மையை ஏற்படுத்தாது என்றாா் அவா்.