முகப்பு
உலகம்

பெண் குழந்தையைக் கடத்திய ராணுவம்? பாலஸ்தீன அமைச்சகம் கண்டனம்!

காஸாவில் பெண் குழந்தை ஒன்றை இஸ்ரேல் ராணுவத்தினர் கடத்திச் சென்றதற்கு பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
கோப்புப்படம்.
பகிர்:

காஸாவில் இஸ்ரேல் போர் குற்றங்களைச் செய்துவருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், பெண் குழந்தை ஒன்றை இஸ்ரேல் ராணுவத்தினர் கடத்திச்சென்றதாக பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'இஸ்ரேல், ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு கொடூரமான குற்றங்களைச் செய்துவருகிறது என்பதற்கு இதுவே ஆதாரம்' எனக் கூறியுள்ளது. 

மேலும், ஆக்கிரமிப்பு செய்துள்ள ராணுத்தின் அதிகாரிகள் உடனடியாக அந்தக் குழந்தையை தேசிய பாலஸ்தீன அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் அதிகாரி ஹரேல் இட்டாச், 'ஒரு வீட்டில் தாய், தந்தை இல்லாமல் தனியாக இருந்ததால் குழந்தையை ராணுவ வீரர்கள் கொண்டு வந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.

குழந்தையின் பெற்றோர் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கருதியதாகத் தெரிவித்திருந்தார். ஹரேல் போரில் உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →