முகப்பு
உலகம்

பொறுமையிழந்த மாணவன், பள்ளியில் துப்பாக்கிச்சூடு!

அமெரிக்காவில் சக மாணவர்களின் கிண்டல்களைப் பொறுக்க முடியாத மாணவன் ஒருவன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:24 PM
துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவன் டைலன் பட்லர்
பகிர்:

அமெரிக்காவின் மத்தியகிழக்கு மாநிலமான லோவாவில் உள்ள பள்ளி ஒன்றில் 17 வயது மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு சிறுவன் பலியாகியுள்ளான். மேலும் தலைமை ஆசிரியர் உள்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

டைலன் பட்லர் எனும் மாணவன் பெர்ரி மேல்நிலைப்பள்ளியில் கைத்துப்பாக்கி ஒன்றின் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளான். ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனைக் கொன்று, 5 பேரைக் காயப்படுத்தியபின் தன்னைச் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பள்ளியின் கழிவறையில் இருந்தபடி காணொலி ஒன்றினை அந்த மாணவன் பதிவிட்டுள்ளார்.

அந்தக் காணொளியில் 'உன் கெட்ட கனவு நிஜமாகப் போகிறது. நான்தான் உனது மோசமான எதிரி' என்பது போன்ற பாடல்வரிகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

டைலன் மிகவும் அமைதியான மாணவன் எனவும் அவனையும் அவனது சகோதரியையும் அதிகமாக கிண்டல் செய்வார்கள், பொறுமையை இழந்தே இந்தக் குற்றத்தை அவன் செய்திருக்க வேண்டும் எனவும் பள்ளி மாணவ மாணவிகள் தெரிவிக்கின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →