உலகம்

வங்கதேச தேர்தலில் ஷகிப் அல் ஹசன் வரலாற்று வெற்றி!

வங்தேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டின் கிரிக்கெட் அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.

DIN

வங்தேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டின் கிரிக்கெட் அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.

வங்கதேசத்தின் 12-ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

வங்கதேச பிரதமரும் அவாமி லீக் கட்சித் தலைவருமான ஷேக் ஹசீனா  2,49,965 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். கடந்த 1986-இலிருந்து அத்தொகுதியில் போட்டியிட்டு வரும் ஹசீனா, 8-ஆவது முறையாக வெற்றி பெற்றாா்.

ஆளும் அவமி லீக் கட்சி சார்பில் மகுரா மேற்கு தொகுதியில் போட்டியிட்ட வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஷசன் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வெற்றியை தொடர்ந்து, வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினராக முதல்முறையாக ஷகிப் அல் ஹசன் பொறுப்பேற்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என் வகுப்புத் தோழன்..! மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

எங்கள் தோல்விக்குக் காரணம் ஹார்திக் பாண்டியா..! தெ.ஆ. பயிற்சியாளர் புகழாரம்!

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

SCROLL FOR NEXT