இஸ்ரேல் கண்டிப்பாக அழிக்கப்படும் ஆனால் இஸ்ரேல் செய்த குற்றங்கள் வரலாற்றில் அழிந்திடாது என ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
குவோம் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அயதுல்லா 'யூதர்களின் ஆட்சி முடிவுக்கு வரும், கடவுளின் உதவியோடு அவர்கள் இந்த உலகில் அழிக்கப்படுவார்கள், ஆனால் அவர்கள் செய்த குற்றங்கள் வரலாற்றில் நீங்கா இடத்தைப் பெறும்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர் 'ஒரு நாள் வரலாற்றில், யூதர்கள் இந்தப் பகுதியை ஆட்சி செய்ய ஆரம்பித்தார்கள். இங்கிருந்த மக்களைக் கொன்று பல குற்றங்களைச் செய்தார்கள். பல்லாயிரக்கணக்கான குழந்தைகளையும் பெண்களையும் கொன்றுகுவித்தார்கள் என எழுதுவார்கள்' எனக் கூறினார்.
'நடப்பவற்றைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் தெரியும், இஸ்ரேல் விரைவில் தோற்கப்போகிறது, பாலஸ்தீனர்கள் வெறியடையப்போகிறார்கள் என்று' எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.