இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பின் கொடி (கோப்புப்படம்) | AP 
உலகம்

ஆப்கானிஸ்தான் வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்ற அமைப்பு!

ஆப்கானிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்று இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பு (ஐஎஸ்) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

DIN

ஆப்கானிஸ்தானில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பு (ஐஎஸ்) பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

ஆப்கானிஸ்தான் காபுலில் உள்ள முக்கிய சிறையின் பணியாளர்களுக்கு சொந்தமான வாகனம் ஒன்றில் வெடிகுண்டு பொருத்தப்பட்டதாக இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.   

இந்தத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 பேர் காயப்பட்டுள்ளதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சட்ரான் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தத் தாக்குதல் நகரின் கிழக்குப்பகுதியில் நடந்ததாகவும், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை காவல்துறையினர் பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அபிராமி கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

780 கிலோ கஞ்சா தீவைத்து அழிப்பு

ரூ.1.2 கோடி ஒதுக்கியும் 9 மாதங்களாக கிடப்பில் நூம்பல் சாலைப் பணிகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிருக்கு கடனுதவி

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

SCROLL FOR NEXT