உலகம்

சீனாவின் ஏற்றுமதி சரிவு

சீனாவின் ஏற்றுமதி 7 ஆண்டுகளில் இல்லாதளவு சரிவைச் சந்தித்துள்ளது.

DIN

சீனாவின் ஏற்றுமதி, ஏழு ஆண்டுகள் இல்லாதளவில் சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுடனான பதட்டம் மற்றும் உலக பொருளாதார தடுமாற்றத்திற்கு பிறகான மீட்சி ஆகியவற்றால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் ஏற்றுமதியின் மதிப்பு சரிந்திருப்பது நாடு பணவாட்டத்தின் சூழலில் சிக்கியுள்ளதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது.

மேலும், அமெரிக்காவுடனான வர்த்தகம் கடந்த 4 ஆண்டுகளில் முதன்முறையாக சரிந்துள்ள அதே நேரத்தில் ரஷ்யாவுடன் வர்த்தகம், உக்ரைன் உடனான போர்ப் பதட்டத்தால் உண்டான பன்னாட்டு அழுத்தத்தால் இதுவரை இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளது.

அடுத்தடுத்த  மாதங்களில் இன்னும் சில பிரச்னைகள் வரக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

வெளிப்புற மாற்றங்களால் பன்னாட்டு வணிகத்தில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அதற்காக கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சீனாவின் சுங்கத் துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் முதல் சரிந்திருந்த ஏற்றுமதி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரித்தபோதும் 2022 டிசம்பர் மாதத்தின் மிகக் குறைந்த தரவுகளோடு ஒப்பிடும்போது குறைந்தளவாக உள்ளது.

2023-ல் அதற்கு முந்தைய ஆண்டைவிட ஒட்டுமொத்தமாக 4.6 சதவீதமளவுக்கு ஏற்றுமதி சரிந்துள்ளது. 2016-க்குப் பிறகு ஏற்படுகிற மிகப்பெரிய சரிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் சுதேசி பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 05-10-2025

கம்பனின் தமிழமுதம் - 65: காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!

தன்னை வியத்தலினால் கேடு

போரை நிறுத்திய புலவர்கள்!

SCROLL FOR NEXT