உலகம்

இந்திய ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்: மாலத்தீவு அதிபர்

மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரா்களை வரும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார். 

DIN


மாலி: மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரா்களை வரும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளார். 

சீன நாட்டின் ஆதரவாளராகக் கருதப்படும் முகமது மூயிஸ், அதிபராக பதவியேற்றவுடன் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்களை திரும்பப் பெறுமாறு மத்திய அரசிடம் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளார் மூயிஸ் .

மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் கடல் கண்காணிப்புக்காக அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், டாா்னியா் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியுள்ளது. அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரா்களை மாா்ச் 15 ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும். மாலத்தீவில் இருந்து உடனடியாக இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என மூயிஸ் தெரிவித்துள்ளார். 

பல விவகாரங்களில், இந்தியா-சீனா இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் சூழலில், மூயிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT