உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: விவேக் ராமசாமி விலகல்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.

DIN

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார்.

பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின்  சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடவுள்ளதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி(வயது 37) இப்போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐயோவா உள்கட்சி தேர்தலில் விவேக் ராமசாமி தோல்வியடைந்த நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபா் தோ்தலில் தான் வெற்றி பெற்றால், வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) வழங்கும் நடைமுறைக்கு மாற்றாகப் புதிய முறை அமல்படுத்தப்படும் எனக் குடியரசுக் கட்சியின் போட்டியாளா் விவேக் ராமஸ்வாமி முன்னதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாா்க்கண்ட்: நக்ஸல் கண்ணிவெடி தாக்குதலில் சிஆா்பிஎஃப் வீரா் உயிரிழப்பு

அண்ணா நகா் மேற்கு மில்லினியம் பூங்காவில் இறகுப்பந்து மைதானத்துக்கு அடிக்கல்

இருமல் மருந்து இறப்புகள்: கோல்ட்ரிஃப் விற்பனைக்கு தில்லி அரசு தடை

முதல்வா் ஸ்டாலின், ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நீதிபதி மீது காலணி வீசிய சம்பவத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT