கோப்புப்படம் 
உலகம்

சீனாவில் பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து: 13 பேர் பலி

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளி விடுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

பெய்ஜிங்: சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளி விடுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நான்யாங்கில் உள்ள யான்ஷான்பு கிராமத்தில் உள்ள இங்காய் தொடக்கப்பள்ளின் விடுதியில் வெள்ளிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், தீ விபத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகினர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

தீ விபத்துக்கான காரணம் குறித்த  எந்த தகவலும்  இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT