கோப்புப்படம். 
உலகம்

கதையைத் திருடிய நிறுவனத்திற்கு தீ வைத்த நபர்! தண்டனை வழங்கிய நீதிமன்றம்!

ஜப்பானில் தன் கதையைத் திருடிய நிறுவனத்தில் தீ விபத்தை ஏற்படுத்திய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஜப்பானில் தன் நாவல்களைத் திருடி அனிமே (Anime) தயாரித்ததாகக் கூறி அனிமே நிறுவனத்திற்கு நெருப்பு வைத்த நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. அந்த தாக்குதல் 36 பேர் உயிரிழந்தனர். 

கடந்த 2019-ல் பிரபல அனிமே தயாரிப்பு நிறுவனமான கியோட்டோ அனிமேசனில் (kyoto animation) ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பான வழக்கிற்கு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஷின்ஜி ஆபா எனும் 45 வயது நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவருக்கு குறைவான தண்டனை வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் வாதாடினார். 

அனால் நீதிமன்றம் அதை ஏற்க மறுத்து அவருக்கு மரண தண்டனை அளித்தது. அந்த விபத்தில் குற்றவாளியும் அதிகமான காயங்களுக்கு உள்ளானார். அவர் மருத்துவமனையில் குணமடைந்த பிறகு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

போட்டி ஒன்றிற்காக ஒப்படைக்கப்பட்ட தன் நாவல்களை அந்த நிறுவனம் திருடியதால் இந்த குற்றத்தை ஹின்ஜி செய்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காதி டிரைலர் தேதி!

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

SCROLL FOR NEXT