கோப்புப்படம் 
உலகம்

ஹாலிவுட் பிரபலங்கள் இடம்பெற்ற 1000 விளம்பரங்களை நீக்கிய யூடியூப்!

பிரபல ஹாலிவுட் நட்சந்திரங்கள் இடம்பெறும் 1000த்திற்கும் மேற்பட்ட விளம்பரங்களை யூடியூப் நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

DIN

கூகுள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் யூடியூப் தளத்தில் ஹாலிவுட் பிரபலங்கள் இடம்பெறும் 1000த்திற்கும் அதிகமான விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன. அந்த விளம்பரங்கள் அனைத்தும் டீப் ஃபேக் செய்யறிவு தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்ட போலி விளம்பரங்கள் என்பது கண்டறியப்பட்டது. 

பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான டைலர் ஸ்விஃட், ஜோ ரோகன், ஸ்டீவ் ஹார்வி ஆகியோர் இடம்பெறும் போலி விளம்பரங்கள் 200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பெருகிவரும் முறைகேடு புகார்களுக்கு இதுபோன்ற போலி விளம்பரங்கள் முக்கியமான காரணமாக உள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது. இதுபோன்ற முறைகேடான போலி விளம்பரங்களை இனம் கண்டறிந்து நீக்கும் பணியை தீவிரமாக செய்துவருவதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்பார் சுவாமி கோயிலில் திருத்தேர் உற்சவம்!

உங்கள் உரையாடல்கள் கண்காணிக்கப்படுகிறதா? எலான் குற்றச்சாட்டுக்கு வாட்ஸ் ஆப் மறுப்பு!

தில்லி யமுனை ஆற்றில் சொகுசுப் படகுப் பயணம்! சுற்றுலாத் துறை அமைச்சர்

பாஜகவுடன் இருப்பவர்கள் அனைவருமே ஊழல்வாதிகள்; என்டிஏ ஒரு துரோகக் கூட்டணி! - முதல்வர் பேச்சு

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: நடிகர் ஜெயராம் வாக்குமூலம்!

SCROLL FOR NEXT