உலகம்

சிகர மங்கை: உலகின் 7 சிகரங்களில் இன்னும் 3 மிச்சம்

சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த மணிதா பிரதான் 4 உயரிய சிகரங்களை ஏறி சாதனை படைத்துள்ளார்.

DIN

சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மணிதா பிரதான், தென் அமெரிக்க கண்டத்தின் உயரிய சிகரமான அகோன்காகுவாவில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

ஆர்ஜெண்டினாவில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் அமைந்திருக்கும் இந்த சிகரத்தின் உச்சியை திங்கள்கிழமை அவர் அடைந்தார்.

இந்த சிகரத்தின் உயரம் 6,962 மீட்டர். மணிதாவின் இலக்கான ஏழு சிகரங்கள் வரிசையில் இது நான்காவது சிகரம்.

ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மிக உயரிய சிகரங்களை ஏறுவது அவரது திட்டம். இதற்கு முன்னர் 2021-ல் எவரெஸ்ட் சிகரம், 2022-ல்  எல்பிரஸ் சிகரம், அதே ஆண்டில் கிளிமஞ்சரோ சிகரம் ஆகியவற்றில் ஏறி சாதனை படைத்தார்.

பிரதான் சிக்கிம் முதல்வருக்கு மற்றும் சோரெங் பகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆதித்யா கோலே தமாங் ஆகியோரின் ஆதரவு மற்றும் ஊக்கத்துக்கு நன்றி தெரிவித்தார். 

ஆதித்யா கோலே தமாங் தனது பேஸ்புக்கில் மணிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில்,  “வாழ்த்துகள் மணிதா பிரதன். எங்களையும் உலகத்தையும் நீங்கள் வியப்பில் ஆழ்த்த தவறுவதே இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT