கோப்புப் படம் 
உலகம்

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஜோ பைடனுக்கு பதிலாக மிஷெல் ஒபாமா?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு பதிலாக பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா போட்டியிட வாய்ப்பு

DIN

வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு பதிலாக மிஷெல் ஒபாமா வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக கருத்துகள் நிலவி வருகின்றன.

கடந்த ஜூன் 29ஆம் தேதியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்திருந்தது. அந்த விவாதத்திற்குப் பிறகு ஜோ பைடன் மீது பல்வேறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

அதாவது, டிரம்புடனான ஜோ பைடனின் அந்த விவாதத்தின்போது பல முறை பேச வார்த்தைகள் இல்லாமல் நீண்ட நேரம் யோசித்தது, புரியாமல் பேசியது, அா்த்தமில்லாமல் பதிலளித்தது போன்ற ஜோ பைடனின் தடுமாற்றங்கள் அவரால் இந்தத் தோ்தலில் மக்களின் வாக்குகளைப் பெற முடியுமா என்ற கவலையை அவருடைய ஜனநாயகக் கட்சியினரிடையே ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஜோ பைடனுக்குப் பதிலாக வேறு வேட்பாளரை நிறுத்துவது குறித்து கட்சிக்குள் விவாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன. அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றாலும், மாற்று வேட்பாளா் குறித்த எண்ணத்தை நேரடி விவாதத்தில் ஜோ பைடனின் செயல்பாடு ஏற்படுத்தி விட்டதாக சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு பதிலாக மிஷெல் ஒபாமாவை வேட்பாளராக ஆக்குவதற்கு சாத்தியம் இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளிவருகின்றன.

மிஷெல் ஒபாமா முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி. இவர் 2007ஆம் ஆண்டுகளில் அவருடைய கணவர் பராக் ஒபாமாவின் வெற்றிக்காக பிரசாரம் மேற்கொள்வதற்கு அரசியலில் நுழைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி: ஜி.கே வாசன்

ஒளிவீசும் நிலம்... லைலா!

ஒசூரில் 780 விநாயகா் சிலைகள் கரைப்பு

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT