விபத்து ஏற்படுத்திய கார் 
உலகம்

தென்கொரியா: சொகுசு கார் விபத்து- ஓட்டுநரிடம் விசாரணை!

தென்கொரியாவில் சொகுசு கார் விபத்து: ஓட்டுநர் மீது வழக்கு விசாரணை!

DIN

நடைபாதையில் கட்டுப்பாடின்றி கார் மோதியதில் ஒன்பது பேர் பலியான விவகாரத்தில் காரின் ஓட்டுநர் மீது வழக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இது குறித்து பேசிய அதிகாரிகள் ஓட்டுநரை கைது செய்ய ஆணை பெறவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

68 வயதான நபர் ஓட்டிவந்த சொகுசு கார் சியோல் நகர் மன்றத்துக்கு அருகில் ஒருவழி சாலையில் தவறான திசையில் சென்றதுடன் எதிரில் வந்த இரு கார்களுடன் மோதியது. பின்னர் சாலையை கடக்க காத்திருந்த பாதசாரிகள் மீது மோதியதில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்து கார் தானாகவே வேகமாக இயங்கியதாக ஓட்டுநர் முன்வைக்கும் தரப்பு குறித்தும் விசாரிக்க காவலர்கள் தடவியல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் நால்வர் வங்கிப் பணியில் இருப்பவர்கள், இருவர் அரசுப் பணியாளர்கள்.

ஓட்டுநர் உள்பட மேலும் நால்வர் காயமுற்றுள்ளனர். ஓட்டுநரின் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. 68 வயதான அவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து ஓட்டிய அனுபவம் உள்ளவர் எனக் கூறப்படுகிறது.

விபத்து நேரும்போது உடன் இருந்த ஓட்டுநரின் மனைவியிடமும் விசாரணை நடத்தவுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT