கோப்புப் படம் 
உலகம்

டெஸ்லா காரில் குறை; சிறுமிக்கு எலான் பதில்!

டெஸ்லா காரில் பிரச்னை இருப்பதாக சிறுமி புகார்

DIN

சீன சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் பிரச்னை இருப்பதாக எலான் மஸ்க்கிடம் புகார் தெரிவித்துள்ளார்.

7 வயதான சீன சிறுமி மோலி என்பவர் பயன்படுத்தி வரும் டெஸ்லா எலெக்ட்ரிக் காரில் சிறு பிரச்னை இருப்பதாகக் கூறி, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கின் பயனர் ஐடியை மேற்கோள் காட்டி, விடியோ பதிவிட்டுள்ளார்.

அந்த விடியோவில் சிறுமி தெரிவித்திருப்பதாவது, ``நான் சீனாவைச் சேர்ந்த மோலி. உங்கள் டெஸ்லா காரில் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. நான் ஒரு படத்தை வரையும்போது, முன்னர் வரைந்த படம் அழிந்து விடுகிறது. இதனை சரிசெய்ய முடியுமா? நன்றி” என்று கூறியுள்ளார்.

சிறுமிக்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க், ``நிச்சயமாக” என்று சிறுமியின் விடியோவில் மறுபதிவிட்டுள்ளார். சிறுமியின் இந்த விடியோவானது, மில்லியன் பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் கடந்துள்ளது. மேலும், நெட்டிசன்கள் பலரும் சிறுமியின் விடியோவிற்கு பாராட்டு தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

சிறுமியைத் தொடர்ந்து டெஸ்லா கார் பயனாளர்கள் பலரும், காரில் உள்ள தொடுதிரையில் ஒரு படம் வரையும்போது, நாம் முன்னர் வரைந்திருந்த படம் மறைந்து விடுகிறது; இந்த பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி-மாா்ட் வருகையால் சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவா்: ஏ.எம். விக்கிரமராஜா

நெல்லையில் லாரி சேதம்: 7 போ் கைது

வாழ்வையும், பண்பாட்டையும் சொல்லக்கூடிய படைப்புகளை வாசியுங்கள்: கவிஞா் மனுஷ்ய புத்திரன்

மதுக்கூடத்தில் பணம் திருட்டு: இருவா் கைது

பண்பொழியில் கட்டடப் பணியில் மண் சரிந்து 3 போ் காயம்

SCROLL FOR NEXT