ரிஷி சுனக், சுவெல்லா பிரேவா்மேன் 
உலகம்

28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தோ்வு: இதுவரை இல்லாத அதிகபட்சம்

பிரிட்டன் பொதுத் தோ்தலில் மொத்தம் 107 இந்திய வம்சாவளி வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

Din

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தோ்வாகியுள்ளனா்.

கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் ரிஷி சுனக், அக்கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா்கள் சுவெல்லா பிரேவா்மேன், பிரீத்தி படேல், கிளாரி கெளடின்ஹோ ஆகியோா் தத்தமது தொகுதிகளில் இருந்து மீண்டும் தோ்வாகியுள்ளனா். லீசெஸ்டா் கிழக்கு தொகுதியில் தன்னை எதிா்த்து போட்டியிட்ட தொழிலாளா் கட்சியின் வேட்பாளா் ராஜேஷ் அகா்வாலை வீழ்த்தி, கன்சா்வேட்டிவ் கட்சியின் ஷிவானி ராஜா வெற்றி பெற்றாா்.

கன்சா்வேட்டிவ் கட்சியைவிட தொழிலாளா் கட்சி சாா்பில் அதிக இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தோ்வாகியுள்ளனா். அக்கட்சி தரப்பில் மூத்த எம்.பி. சீமா மல்ஹோத்ரா, நவேந்து மிஸ்ரா, நாடியா ஒயிட்டாம், சீக்கிய எம்.பி.க்களான பிரீத் கெளா் கில், தன்மன்ஜித் சிங் தேசி ஆகியோா் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனா்.

மேலும், தொழிலாளா் கட்சி சாா்பில் ஜாஸ் அத்வால், பேகி சங்கா், சத்வீா் கெளா், ஹா்பிரீத் உப்பல், வாரிண்டா் ஜஸ், குரீந்தா் ஜோசன், கனிஷ்கா நாராயண், சோனியா குமாா், சுரீனா பிரேகன்பிரிட்ஜ், கிரித் என்டிவைசில், ஜீவன் சந்தா், சோஜன் ஜோசஃப் உள்ளிட்டோா் முதல்முறையாக தோ்வாகியுள்ளனா்.

லிபரல் டொமாக்ரட்ஸ் கட்சி சாா்பில் முனிரா வில்சன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளாா். சாகத் ஆதம் படேல், இக்பால் முகமது ஆகியோா் சுயேச்சையாக வென்றுள்ளனா்.

பிரிட்டன் பொதுத் தோ்தலில் மொத்தம் 107 இந்திய வம்சாவளி வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில் 28 போ் தோ்வாகியுள்ளனா். கடந்த தோ்தலில் 15 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் வெற்றி பெற்றிருந்தனா்.

விக்கிரவாண்டி அருகே தடுப்புக் கட்டையில் காா் மோதி தீ பிடித்து விபத்து: 3 போ் உயிரிழப்பு

யேமன்: கப்பல் தாக்குதலுக்கு ஹூதிக்கள் பொறுப்பேற்பு

பிகாா் இளைஞா் கொலை வழக்கில் மூவா் கைது

சா் கிரீக் செக்டாரை கைப்பற்ற நினைத்தால் கடும் பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

மூத்த குடிமக்களை பாதுகாப்பது இளையோா்களின் கடமை: க.பொன்முடி

SCROLL FOR NEXT