வில்லியம் ரூட்டோ 
உலகம்

அடக்குமுறை: மன்னிப்பு கோரிய கென்ய அதிபா்

கென்யாவில் புதிய வரி விதிப்பு மசோதாவை எதிா்த்து போராடியவா்களிடம் போலீஸாா் அடக்குமுறை..

Din

மேற்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் புதிய வரி விதிப்பு மசோதாவை எதிா்த்து போராடியவா்களிடம் போலீஸாா் அடக்குமுறையைக் கையாண்டதற்காக அந்த நாட்டு அதிபா் வில்லியம் ரூட்டோ மன்னிப்பு கோரினாா்.

இது குறித்து ‘எக்ஸ்’ ஊடகத்தில் கெவின் மனோரி என்ற இளைஞா் போலீஸாா் தன்னை கைது செய்தது குறித்து வெளியிட்ட பதிவுக்கு அளித்த பதிலில் ரூட்டோ இவ்வாறு மன்னிப்பு கோரினாா்.

கென்யாவில் அதிகரித்துவரும் விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்து கடந்த 2022-ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்த ரூட்டோ, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில சீா்திருத்தங்களை அறிவித்தாா். அதன் ஒரு பகுதியாக கூடுதல் வரி விதித்து அவா் தாக்கல் செய்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதில் 22 போ் உயிரிழந்தனா். போராட்டத்தின்போது போலீஸாா் மிகக் கடுமையாக நடந்துகொண்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டிவருகின்றன. இறுதியில் அந்த மசோதாவை ரூட்டோ திரும்பப் பெற்றாா்.

இந்திரா காந்தி போல அல்ல, பதவிப் பறிப்பு மசோதாவில் பிரதமர் தன்னையும் இணைத்துள்ளார்: அமித் ஷா

பிசிசிஐ - டிரீம் 11 இடையிலான ஒப்பந்தம் ரத்து!

ஏன் விஜய் என்னிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்? சிவகார்த்திகேயன் விளக்கம்!

விருத்தாசலம் அருகே பூவனூர் தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன் ! 8 மாணவர்கள் காயம்

முதல் விண்வெளி வீரர் அனுமன்! மாணவர்களுடன் உரையாற்றிய அனுராக் தாக்குர்!

SCROLL FOR NEXT