ஜான் லான்டௌ படம் | ஜான் லான்டௌ எக்ஸ்
உலகம்

டைட்டானிக், அவதார் படத் தயாரிப்பாளர் காலமானார்!

டைட்டானிக், அவதார் படத் தயாரிப்பாளர் ஜான் லான்டௌ காலமானார்.

DIN

டைட்டானிக், அவதார் மற்றும் அவதார்: தி வே ஆஃப் தி வாட்டர் ஆகிய படங்களுக்காக ஆஸ்கார் விருது வென்ற தயாரிப்பாளரான ஜான் லான்டௌ காலமானார். அவருக்கு வயது 63.

ஜேம்ஸ் கேமரூன் தனது நீண்டகால நண்பரும், அவரது படங்களின் பிரதான தயாரிப்பாளருமான ஜான் லான்டௌ, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 16 மாத போராட்டத்துக்குப் பின் ஜூலை 5 அன்று காலமானார்.

அவரது இறப்பு குறித்து அவதார் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ள அறிக்கையில், “அவதார் குடும்பம் எங்கள் நண்பரும் தலைவருமான ஜான் லான்டௌவின் இழப்பால் வருந்துகிறது. அவரின் மரபு அவர் தயாரித்த படங்கள் மட்டுமல்ல, அவர் கட்டமைத்த அக்கறை, அயராத நுண்ணறிவு, முற்றிலும் தனித்துவமானது” எனக் கூறியுள்ளார்.

ஜான் லான்டௌன் ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து தயாரித்த டைட்டானிக், அவதார் மற்றும் அவதார்: தி வே ஆஃப் தி வாட்டர் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 2 பில்லியன் டாலருக்கு மேல் வசூலித்த ஒன்றாக உள்ளன.

ஜான் லான்டௌ 1960 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி நியூயார்க்கில் பிறந்தார். இவரது பெற்றோர் எலி லான்டௌ - எடி லான்டௌ அமெரிக்க ஃபிலிம் தியேட்டரை தொடங்கி படங்களை தயாரித்து வந்தனர். இவர் பாராமௌன்டுடன் இணைந்து கேம்பஸ் மேன் படத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ஆனார். அதைத்தொடர்ந்து டிஸ்னியுடன் இரண்டு படங்களை இணைந்து தயாரித்துள்ளார். இவர் கடைசியாக அவதார் படத்தின் அடுத்த பாகங்களை தயாரிப்பதில் மும்முரமாக இருந்தார்.

அவருக்கு ஜூலி என்ற மனைவியும், ஜேமி மற்றும் ஜோடி என்ற ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ஜான் லான்டௌ தயாரித்த படங்கள்: கேம்பஸ் மேன் (1987), டைட்டானிக் (1997), சோலாரிஸ் (2002), அவதார் (2009), அலிடா: போர் ஏஞ்சல் (2019), அவதார்: த வே ஆஃப் வாட்டர் (2022).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கள்ளக்குறிச்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

தளவாய் கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் தொடக்கி வைப்பு

நஜாஃப்கரில் தூய்மைப் பணியில் அமைச்சா் ஆஷிஷ் சூட்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: இரு ஆசிரியா்கள் கைது

மத்திய கல்வி அமைச்சகம் முன் என்எஸ்யுஐ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT