தூர்தர்ஷனின் மூத்த தொகுப்பாளர் சரளா மகேஷ்வரி காலமானார்!
தூர்தர்ஷனின் மூத்த தொகுப்பாளர் சரளா மகேஷ்வரி காலமானது குறித்து...
தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் மூத்த தொகுப்பாளர் சரளா மகேஷ்வரி காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பணிப்புரிந்த மூத்த தொகுப்பாளரும், செய்திவாசிப்பாளருமான சரளா மகேஷ்வரி (வயது 71) வயது மூப்பினால் வியாழக்கிழமை (பிப். 12) காலமானார்.
கடந்த 1976 முதல் 1984 ஆம் ஆண்டு வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பணிப்புரிந்த சரளா மகேஷ்வரி இந்தியத் தொலைக்காட்சி நேயர்களிடையே மிகவும் பிரபலமாக அறியப்பட்டார்.
Advertisement
Advertisement
1984 ஆம் ஆண்டில் பிரிட்டன் நாட்டுக்குக் குடிபெயர்ந்த அவர் 1986 வரை பிபிசி நிறுவனத்தில் செய்திவாசிப்பாளராகப் பணியாற்றி வந்தார். பின்னர், தாயகம் திரும்பிய சரளா மகேஷ்வரி 1988 ஆம் ஆண்டு முதல் மீண்டும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், தொகுப்பாளர் சரளா மகேஸ்வரியின் மறைவுக்கு மூத்த பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் தில்லியில் உள்ள நிகம் போத் காட் பகுதியில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Senior Doordarshan anchor Sarala Maheshwari has passed away.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.