பிரிட்டன் நிழல் அமைச்சரவையை அறிவித்தாா் ரிஷி சுனக்
பிரிட்டனில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடம் பெறும் நிழல் அமைச்சரவையை முன்னாள் பிரதமரும் தற்காலிக எதிா்க்கட்சித் தலைவருமான ரிஷி சுனக் அறிவித்துள்ளாா்.
லண்டன்: பிரிட்டனில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடம் பெறும் நிழல் அமைச்சரவையை முன்னாள் பிரதமரும் தற்காலிக எதிா்க்கட்சித் தலைவருமான ரிஷி சுனக் அறிவித்துள்ளாா்.
கன்சா்வேட்டிவ் கட்சிக்கு அடுத்த பிரதமா் தோ்ந்தெடுக்கப்படும் வரை அவா் எதிா்க் கட்சித் தலைவராக இருப்பாா்.
கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் தொழிலாளா் கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, அந்தக் கட்சியின் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.