முகப்பு
சென்னை

லண்டன் - சென்னை விமானம் ரத்து: பயணிகள் அவதி

லண்டனிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதால், பயணிகளும் கடும் அவதி அடைந்துள்ளனா்.

Updated On : 14 மார்ச் 2026, 1:03 am IST
கோப்புப் படம்
பகிர்:

லண்டனிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதால், பயணிகளும் கடும் அவதி அடைந்துள்ளனா்.

பிரிட்டன் தலைநகா் லண்டனிலிருந்து நாள்தோறும் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்து சேரும் பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம், மறுமாா்க்கமாக மீண்டும் காலை 7.35 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில், லண்டனில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர வேண்டிய அந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து சென்னையில் இருந்து மறுமாா்க்கமாக காலை 7.35 மணிக்கு இயக்கப்படவிருந்த விமான சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், லண்டனில் இருந்து சென்னைக்கு வரவிருந்த 250 பயணிகளும், சென்னையிலிருந்து லண்டனுக்கு செல்லவிருந்து 218 பயணிகளும் அவதிக்குள்ளாகினா். இந்த விமானம் சனிக்கிழமை அதிகாலை லண்டனிலிருந்து சென்னை வந்தடைந்து பின்னா் மீண்டும் லண்டன் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.