வெள்ளை மாளிகை 
உலகம்

போரை நிறுத்த ரஷியாவுடனான உறவை இந்தியா பயன்படுத்த வேண்டும்: அமெரிக்கா

மோடி - புதின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை கருத்து..

DIN

உக்ரைன் - ரஷியா போரை நிறுத்துவதற்கு ரஷியா உடனான சிறப்பு உறவை இந்தியா பயன்படுத்த அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி மார்கரெட் மேக்லியோட் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா - ரஷியா இடையேயான 22-வது உச்சி மாநாட்டில் அந்நாட்டு அதிபர் புதினுடன் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, உக்ரைன் போர் குறித்து பேசிய மோடி, “அமைதியின் பக்கம் இந்தியா நிற்கிறது. உக்ரைன் பிரச்னைக்கு போர் தீர்வல்ல, போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து விதமான பங்களிப்பையும் ஆற்ற இந்தியா தயாராக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், மோடி - புதின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

”உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளுக்கு இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் ஆதரவளிப்பது முக்கியமானதாக நாங்கள் கருதுகிறோம். இதனை அனைத்து நாடுகளும் உணர வேண்டியது அவசியம்.

ரஷியாவுடனான இந்தியாவின் நீண்டகால உறவு, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கும், அமைதிக்கான நடவடிக்கையை எடுக்கவும் அந்நாட்டு அதிபர் புதினை ஊக்குவிக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது. போரை தொடங்கிய புதினால், அதனை முடிக்க முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான மார்கரெட் மேக்லியோட்,

“இந்தியாவும் ரஷியாவும் மிகவும் சிறப்பான கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. போருக்கு எதிராக ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா இந்த சிறப்பு கூட்டாண்மையைப் பயன்படுத்த விரும்புகிறோம். உக்ரைனில் ரஷியாவின் போர் ஐ.நா சாசனத்தை மீறுவதாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்: இங்கிலாந்து பயிற்சியாளர்

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

SCROLL FOR NEXT