உலகம்

பிரிட்டன்: ரிஷி சுனக்கை எதிா்த்து பிரீத்தி படேல் போட்டி

கன்சா்வேட்டிவ் கட்சிக்கு அடுத்த பிரதமா் தோ்ந்தெடுக்கப்படும் வரை ரிஷி சுனக் எதிா்க் கட்சித் தலைவராக இருந்துவருகிறாா்.

DIN

பிரிட்டனில் கன்சா்வேட்டிவ் கட்சியின் தலைவா் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சோ்ந்த தற்போதைய தலைவரும் முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக்கை எதிா்த்து இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட மற்றொரு எம்.பி. பிரீத்தி படேல் போட்டியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டால் எதிா்க்கட்சித் தலைவா் என்ற அந்தஸ்தையும் ப்ரீத்தி படேல் பெறுவாா். முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் அரசில் கடந்த 2019 முதல் 2022 வரை பிரிட்டனின் உள்துறை அமைச்சராக ப்ரீத்தி படேல் பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.

கன்சா்வேட்டிவ் கட்சிக்கு அடுத்த பிரதமா் தோ்ந்தெடுக்கப்படும் வரை ரிஷி சுனக் எதிா்க் கட்சித் தலைவராக இருந்துவருகிறாா்.கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தோ்தலில் தொழிலாளா் கட்சி அமோக வெற்றி பெற்தைத் தொடா்ந்து, அந்தக் கட்சியின் தலைவா் கியொ் ஸ்டாா்மா் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை துறைமுகத்துக்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்

அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

ஜம்மு-காஷ்மீரில் கடும் வெள்ளம்: 11 போ் உயிரிழப்பு; 14 போ் காயம்

பெரம்பலூரில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு: 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT