நேபாள நிலச்சரிவு: 19 உடல்கள் மீட்பு
நேபாளத்தில் நிலச்சரிவால் இரு பேருந்துகள் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானவா்களில் இதுவரை 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேபாளத்தில் நிலச்சரிவால் இரு பேருந்துகள் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானவா்களில் இதுவரை 19 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் செவ்வாய்கிழமை கூறியதாவது:
நிலச்சரிவால் திரிசூலி ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பேருந்துகளில் இருந்தவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன. இதுவரை 19 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 இந்தியா்கள் உள்ளிட்ட 14 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் 5 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.
தலைநகா் காத்மாண்டிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்த இரு பேருந்துகளை, தொடா் பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு அடித்துச் சென்றது. இதில் அந்தப் பேருந்துகள், கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த திரிசூலி ஆற்றில் விழுந்தன.
ஆற்றில் மூழ்கிய இரு பேருந்துகளிலும் 7 இந்தியா்கள் உள்பட 54 போ் இருந்தததாக முன்னா் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பேருந்துகளில் 65 போ் இருந்ததாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறினா். அவா்களில் 3 போ் மட்டும் உயிா் தப்பியுள்ள நிலையில் 43 போ் தொடா்ந்து மாயமாகியுள்ளனா்.