அமெரிக்க கொடி 
உலகம்

அமெரிக்காவில் 356 நிறுவனங்கள் திவால்!

அமெரிக்காவில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு நடப்பாண்டில் மட்டும் 356 நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

DIN

அமெரிக்காவில் கடந்த மாதம் 356 நிறுவனங்கள் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது கரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த 2020-ம் ஆண்டை விட அதிகமான அளவில் இருப்பதால், பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டு பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததை விட 2024-ம் ஆண்டு மோசமாக இருப்பதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இண்டலிஜன்ஸ் நிறுவனம் இரு வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூன் மாதத்தில் 75 நிறுவனங்கள் திவாலானதாக தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய மே மாதத்தின் 62-ஐ விட அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதன்மூலம் கரோனா தொற்று உச்சத்தில் இருந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 74 நிறுவனங்கள் திவாலானதை விட தற்போது அதிகளவில் உள்ளதாகவும், நடப்பாண்டில் இதுவரை 356 நிறுவனங்கள் திவாலாகியுள்ளதாகவும், கடந்த 13 ஆண்டுகளில் இருந்ததை விட இது அதிகமானது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

’ஸோம்பி நிறுவனங்கள்’ என்பவை கடன்பட்ட வணிக நிறுவனங்களாகும். அவை வருமானத்தை உருவாக்கினாலும், இயங்கும் செலவுகள் மற்றும் நிலையான செலவுகள் (கூலி, கட்டணங்கள், வாடகை) ஆகியவற்றிற்கு செலவு செய்த பிறகு முழு கடனை கட்ட முடியாமல் தங்கள் கடன்களுக்கான வட்டியைச் செலுத்த போதுமான நிதியை மட்டுமே வைத்திருக்கும்.

உலகெங்கிலும் இந்த நிலையில் 7,000 நிறுவனங்கள் உள்ளதாகவும், அமெரிக்காவில் மட்டும் 2,000 நிறுவனங்கள் அவ்வாறு இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொருளாதார நிலை குறித்த எச்சரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதால் அதிகளவிலான நிறுவனங்கள் திவாலானதாக அறிவித்து வருகின்றன.

அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை 4.1% அதிகரித்துள்ளதாகவும், பொருளாதார மந்தநிலை ஜூலை 2025-ம் ஆண்டு வரை தொடரும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT