நிக்கோலஸ் மதுரோ கோப்புப் படம்
உலகம்

வெனிசுலா அதிபர் தேர்தலில் மதுரோ மீண்டும் வெற்றி!

மதுரோ, 51.2 சதவீத வாக்குகளைப் பெற்றார்.

DIN

வெனிசுலாவில் அதிபர் பதவிக்கு நடைபெற்ற மறு தேர்தலில், தற்போது ஆளும் சோஷலிஸ்ட் கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில், மறு தேர்தல் நடத்தப்பட்டது.

இதில், தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ (ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி) மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் எட்முண்டோ கோன்சலெஸ் (ஜனநாயகக் கட்சி) களம் கண்டார்.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று (ஜூலை 28) வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மதுரோ, 51.2 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும், அவரை எதிர்த்து போட்டியிட்ட எட்முண்டோ கோன்சலெஸ் 44.2 சதவீத வாக்குகளை பெற்றதாவும் தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசூலா அதிபர் தேர்தலில் ஹியூகோ சாவேஸின் ஆதரவாளரும், அவரால் அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்டவருமான நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்றுள்ளார்.

வெனிசுலா தேசிய தேர்தல் ஆணையர் எல்விஸ் அமோரோசோவின் இந்த அறிவிப்பை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் கோன்சலெஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட முடிவுகள், மக்களின் வாக்குகளைப் பிரதிபலிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ராஜிநாமா!

சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ. கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

SCROLL FOR NEXT