முகப்பு
உலகம்

நிலச்சரிவில் பலியானவரின் உடல் மீட்பு; மூவர் மாயம்!

இந்தோனேஷியாவில் நிலச்சரிவில் உயிரிழந்தவர் உடல் மீட்பு; மூவரை தேடும் பணி தீவிரம்

Updated On : 5 ஜூன், 2024 at 3:07 PM
பகிர்:

இந்தோனேஷிய மாகாணம் கிழக்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த சுரங்க தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது எனவும் மேலும் மூவரின் நிலை அறிய முடியவில்லை எனவும் புதன்கிழமை வெளியிடப்பட்ட அரசு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் ஆற்றின் கரையில் அமைந்த மண் சுரங்கத்தில் வேலை பார்த்து வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

அதில் ஒருவர் தப்பி பிழைத்துள்ளதாக மீட்புப் பணி அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Advertisement

நிலச்சரிவில் கொல்லப்பட்ட ஒருவரின் உடலை செவ்வாய்க்கிழமை 20 மீட்டர் ஆழத்திலிருந்து மீட்டுள்ளனர். மண் குவியலுக்கு கீழே இன்னும் மூவர் புதையுண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் உடல்களை மீட்கும் பணியில் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணி தொடர்ந்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.