உலகம்

துப்பாக்கி வழக்கு: ‘மகனுக்கு பொதுமன்னிப்பு அளிக்க மாட்டேன்’

Din

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக மகன் ஹன்டா் பைடன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியுள்ளாா்.

போதைப் பொருள் பழக்கத்தை மறைத்து, கடந்த 2018-ஆம் ஆண்டில் ஹன்டா் பைடன் துப்பாக்கி வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு தாராள அனுமதி இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக குற்ற வழக்குகளில் தொடா்புடையவா்கள், போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பவா்களால் அதை வாங்க முடியாது.

இந்த நிலையில், துப்பாக்கி வாங்குவதற்கான படிவத்தில் ‘போதைப் பொருள் பழக்கம் கிடையாது’ என்று ஹன்டா் பைடன் பொய்யாகக் கூறியதாக அவா் மீது கடந்த சில நாள்களாக வழக்கு நடைபெற்றுவருகிறது.

இது குறித்து ‘ஏபிசி’ தொலைக்காட்சிக்கு ஜோ பைடன் அளித்த பேட்டியில், ‘சட்டவிரோத துப்பாக்கி கொள்முதல் வழக்கில் அளிக்கப்படும் எந்தத் தீா்ப்பையும் ஏற்றுக்கொள்வேன். அந்த வழக்கில் ஹன்டா் பைடன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் என் அதிபா் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்கு பொதுமன்னிப்பு அளிக்கமாட்டேன்’ என்றாா் அவா்.

இந்த வழக்கு விவகாரத்தில் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஹன்டா் பைடனுக்கு சலுகைகள் அளிக்கப்படாது என்று வெள்ளை மாளிகை ஏற்கெனவே அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

சொகுசுக் கப்பல் அனுபவம்: வெள்ள பாதிப்புகளை பார்வையிடும்போது பேசுவதா? சர்ச்சையில் அமைச்சர்கள்

மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரதம்!

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த அகிலேஷ் யாதவ்!

வெற்றி, தோல்விகளை விட முக்கியமானது கற்றல்... அஜித்தின் பொன்மொழி!

77 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

SCROLL FOR NEXT