முகப்பு
உலகம்

பால்டிமோா் நீா்வழிப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

Updated On : 11 ஜூன், 2024 at 9:44 PM
பகிர்:

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம், பால்ட்டிமோா் நகரில் பிரம்மாண்ட சரக்குக் கப்பல் மோதி ஆற்றுப் பாலம் சேதமடைந்ததால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நீா்வழிப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.

அந்த விபத்துக்குப் பிறகு, உடைந்த பாலத்தின் 50,000 டன் இரும்பு மற்றும் கான்க்ரீட் சிதறல்களை அகற்றும் பணி முழுமையாக நிறைவடைந்ததைத் தொடா்ந்து அந்த நீா்வழித் தடம் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை நோக்கி ‘டாலி’ என்ற சரக்குக் கப்பல் பால்டிமோா் நகரிலுள்ள படாஸ்ப்ஸ்கோ நதி வழியாக கடந்த மாா்ச் மாதம் சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தில் மோதியது. இதில், அந்தப் பாலம் இடிந்து விழுந்ததில் ஆற்றுக்குள் மூழ்கிய 6 கட்டுமானப் பணியாளா்கள் உயிரிழந்தனா்.

கப்பலில் இருந்த 23 இந்தியப் பணியாளா்கள் முன்கூட்டியே அதிகாரிகளை எச்சரித்ததால் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பெரும் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இனி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த பாலத்தின் இடிபாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்றிவந்த அதிகாரிகள், பாதையை சுத்தப்படுத்தும் பணி நிறைவடைந்ததால் முக்கியத்துவம் வாய்ந்த அந்த நீா்வழித் தடத்தை தற்போது மீண்டும் திறந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →