கனடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் 
உலகம்

உக்ரைனுக்கு ஆயுத உதவி: கனடா அறிவிப்பு!

உக்ரைனுக்கு கனடா அனுப்பும் ஆயுதங்கள்: பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவிப்பு

DIN

உக்ரைனுக்கு ஏவுகணைகள், கையெறிக் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கனடா அனுப்பவுள்ளதாக கனடிய பாதுகாப்புத் துறை அமைச்சர் பில் பிளேர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

2000-க்கும் அதிகமான ஏவுகணைகள், 29 ஜெர்மனிய ரிமோட் கட்டுப்பாட்டு ஆயுத வாகன அமைப்புகள், 1,30,000 சிறிய கையெறி குண்டுகள் ஆகியவற்றை கனடா உக்ரைனுக்கு அனுப்பவுள்ளது.

மேலும் 50 ஆயுதம் ஏந்திய வாகனங்கள் அனுப்பப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், முதல் நான்கு வாகனங்கள் இந்த வாரம் கனடாவிலிருந்து அனுப்பப்படும் எனவும் அடுத்த வாரங்களில் அவை உக்ரைனுக்குக் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 2022-ல் ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கியது. மூன்று ஆண்டுகளாக போர் தொடர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT