கடும் பக்க விளைவுகள் இருப்பதாகக் கூறி, ஆன்டிபயாடிக் ஊசி மூலம் செலுத்தப்படும் பயோடக்ஸ் மருந்து விற்பனை மற்றும் விநியோகத்துக்கு நேபாள நாட்டின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸைடஸ் ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த பயோடக்ஸ் மருந்து, அதில் குறிப்பிட்ட தயாரிப்பு முறைகளைப் பின்பற்றவில்லை என்பது, நேபாளத்தின் மருந்து ஒழுங்குமுறை ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதாக காத்மாண்டு போஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக காத்மாண்டு போஸ்ட் வெளியிட்டிருக்கும் தகவலில், பயோடக்ஸ் மருந்து குறித்து, மருந்து தயாரிப்பு நிறுவனம், இறக்குமதியாளர்கள், விநியோகிப்பாளர்கள் என அனைவருக்கும் மருந்து விற்பனை, இறக்குமதி மற்றும் விநியோகத்தை, அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருப்பதாக மருத்துக் கட்டுப்பாட்டுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், மேற்குறிப்பிட்ட ஆன்டிபயாடிக் மருந்தினால், மிக மோசமான பக்கவிளைவுகள் ஏற்படுவது கண்டறியப்பட்டிருப்பதாகவும், விசாரணை முடிவடைந்த பிறகே, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முடிவு செய்யப்படும்.
பயோடக்ஸ் 1ஜிஎம் மருந்து நேபாள ஆய்வுக் கூடத்தில் பரிசோதிக்கப்பட்டது, அதன்பிறகு அதன் விற்பனை தடை செய்யப்பட்டது. இந்த மருந்து, மூளை, நுரையீரல், காது, சிறுநீரக பாதை தொற்று, தோல் மற்றும் தசைகளில் பாக்டீரியல் பாதிப்புகள் ஏற்படும் போது அதனைக் குணப்படுத்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
இது குறித்து நேபாள மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்திருப்பது என்னவென்றால், பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மருந்துப் பிரிவு, பாதுகாப்பானது அல்ல, நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டால் அவர்களது உயிருக்கே ஆபத்து விளைவிக்கலாம் என்று தெரிவித்திருந்தது.
மேலும், இந்த மருந்து தடை விதிக்கப்படுவதால், பாக்டீரியா பாதிப்புகளால் அவதிப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், இதே கூட்டு சேர்க்கைகளைக் கொண்டு வேறு நிறுவனங்கள் தயாரித்த மருந்துகள் தற்போது விற்பனையில் இருப்பதாகவும் செய்தித் தொடர்பாளர் கூறியிருப்பதாக காத்மாண்டு போஸ்ட் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.