கனமழை காரணமாக சீனாவின் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய சீனாவில் உள்ள ஹூனான் மாகாணத்தில் உள்ள யுவான்லிங்க் கவுண்டி பகுதியில் திங்கள்கிழமை நால்வர் உயிரிழந்ததாகவும் ஒருவர் காணாமல் போனதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சனிக்கிழமை நள்ளிரவு 2 மணி முதல் காலை 8 மணி வரை கனமழை இங்கு பெய்துள்ளது, மழைப்பொழிவு 337.8 மிமீ ஆக பதிவானது. இந்த மழைப்பொழிவு வெள்ளப்பெருக்கை உருவாக்கியதுடன் நகரிலும் வெள்ளநீர் சூழக் காரணமானது.
மீட்புப் பணிகள் மற்றும் பேரிடர் சேவைகளை ஒருங்கிணைத்து தேவைப்படுபவரக்ளுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கவும் மின்சார, தொலைத்தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்டவற்றை சீரமைக்கவும் உள்ளூர் நிர்வாகம் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.