உலகம்

24 மணிநேரத்தில் 97 பாலஸ்தீனர்கள் படுகொலை!

123 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காஸா சுகாதாரத் துறை தகவல்.

DIN

இஸ்ரேல் தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 97 பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 123 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காஸா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - காஸாவின் ஹமாஸ் படையினருக்கு இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. காஸாவில் தரைவழியாகவும் நுழைந்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் காஸா நகரத்தின் குவைத் ரவுன்டானா பகுதியில் உணவு விநியோகம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தை நோக்கி இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். கூட்டமாக இருந்த இடத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், பலர் படுகாயமடைந்தனர்.

நேற்று முதல், இரண்டாவது முறையாக மக்கள் அதிகம் கூடியுள்ள இடங்களை நோக்கி இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

தெற்கு காஸாவின் கான்யூனிஸ் பகுதியில் உள்ள வீடுகளை நோக்கி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் இதுவரை 30,631 கொல்லப்பட்டுள்ளதாகவும், 72,043 பேர் படுகாயமடைதுள்ளதாகவும் வாஃபா விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT