காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்! 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 21 பேர் கொலை!
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 5 குழந்தைகள், 7 பெண்கள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டது குறித்து...
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 21 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையில் நடைபெற்று வந்த போரானது கடந்த 2025 அக்.10 அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இருதரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
Advertisement
Advertisement
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகான இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 556 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 1500 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காஸாவின் பல்வேறு பகுதிகளில் இன்று (பிப். 4) காலை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 2 பச்சிளம் குழந்தைகள், 3 குழந்தைகள் மற்றும் 7 பெண்கள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சிப்படையினர் தாக்கியதால் இஸ்ரேலிய வீரர் ஒரு படுகாயமடைந்ததற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த காஸா மீதான இஸ்ரேலின் போரில் 2 ஆண்டுகளில் மட்டும் 71,800 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
21 people were killed in the Israeli attacks on Gaza.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.