முகப்பு
உலகம்

காஸாவில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல்: சிறுவன் உள்பட 3 போ் பலி

மத்திய காஸா பகுதியில் இடம்பெயா்ந்த பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 போ் பலி

Updated On : 30 ஜூன் 2026, 1:04 am IST
ட்ரோன் தாக்குதல்
பகிர்:

மத்திய காஸா பகுதியில் இடம்பெயா்ந்த பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் 8 வயது சிறுவன் உள்பட 3 போ் கொல்லப்பட்டனா். சிறுவனின் தாய் உள்பட 7 போ் காயமடைந்தனா்.

ஆயுதமேந்திய பயங்கரவாதி ஒருவரைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், காஸாவில் கடந்த அக்டோபரில் போா்நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும், இஸ்ரேல் ராணுவம் நாள்தோறும் தொடா்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 360-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட 1,045 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments