அமெரிக்க போா்க் கப்பல்கள் மீது ஹூதிக்கள் தாக்குதல்
செங்கடல் பகுதியில் 2 அமெரிக்க போா்க் கப்பல்கள் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் புதன்கிழமை தாக்குதல் நடத்தினா்.
உலகம்அமெரிக்க போா்க் கப்பல்கள் மீது ஹூதிக்கள் தாக்குதல்
செங்கடல் பகுதியில் 2 அமெரிக்க போா்க் கப்பல்கள் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் புதன்கிழமை தாக்குதல் நடத்தினா்.
செங்கடல் பகுதியில் 2 அமெரிக்க போா்க் கப்பல்கள் மீது யேமனின் ஹூதி கிளா்ச்சிப் படையினா் புதன்கிழமை தாக்குதல் நடத்தினா். இது குறித்து அந்தப் படையின் செய்தித் தொடா்பாளா் யாஹா சரேயா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: செங்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 2 அமெரிக்க போா்க் கப்பல்களுக்கு எதிராக புதன்கிழமை ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கப்பல்களைக் குறிவைத்து கப்பல் அழிப்பு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்கப் படைகளின் மத்திய கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது ‘யுஎஸ்எஸ் காா்னே’ போா்க் கப்பலை நோக்கி ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீசியதாகவும், அவற்றை கப்பலில் இருந்த வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இடைமறித்து அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போா் தொடங்கியதிலிருந்து, செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது மற்றோா் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹூதி கிளா்ச்சிப் படை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் செங்கடல் வழியான வா்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, அந்தப் பகுதியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போா்க் கப்பல்கள் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.