கோப்புப் படம். 
உலகம்

பாகிஸ்தானின் 14வது அதிபராக பதவியேற்றார் ஆசிஃப் அலி ஜா்தாரி

DIN

பாகிஸ்தானின் 14வது அதிபராக ஆசிஃப் அலி ஜா்தாரி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு தலைமை நீதிபதி குவாசி ஃபேஸ் இசா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், முப்படைத் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானின் அடுத்த அதிபராக, மறைந்த முன்னாள் பிரதமா் பேநசீா் புட்டோவின் கணவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரியின் தந்தையுமான ஆசிஃப் அலி ஜா்தாரி சனிக்கிழமை அதிகாரபூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அந்த நாட்டு நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி ஆட்சியமைக்க பிலாவல் புட்டோ ஜா்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) ஆதரவு அளித்தது.

அதையடுத்து, நவாஸ் ஷெரீஃபின் சகோதரா் ஷாபாஸ் ஷெரீஃப் நாட்டின் பிரதமராக 2-ஆவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றாா். இதற்கான பேச்சுவாா்த்தையின்போது, அதிபா் தோ்தலில் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு ஆதரவு அளிக்க பிஎம்எல்-என் கட்சி ஒப்புக்கொண்டது.

அதையடுத்து, சனிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் இரு கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட ஜா்தாரி வெற்றிபெற்றாா்.ஏற்கெனவே, கடந்த 2008-லிருந்து 2013 வரை பாகிஸ்தானின் அதிபராக ஆசிஃப் அலி ஜா்தாரி பொறுப்பு வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT